Wednesday 20 September 2017

ரூ. 5க்கு ஒரு கேன் (20 லி) மினரல் வாட்டர் கொடுத்து தன் சொந்த ஊர் மக்களை மகிழ்ச்சி படுத்தும் சமூக சேவகர்


புத்தாம்பூரை சேர்ந்த சிவராம் (36). மரைன் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், மாலுமியாக பயிற்சியும் பெற்றுள்ளார். தற்போது, சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு இறுதியில் பெருமழையால் சென்னையே தண்ணீரில் தத்தளித்த போது, குடிக்க தண்ணீரின்றி மக்கள் கடும் சிரமப்பட்டனர். அப்போது, தண்ணீரை சுத்திகரித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கினார். இதனால், சென்னை மக்களால் தண்ணீர் மனிதர் என்றழைக்கப்பட்டார் சிவராம். 

தனது, சொந்த ஊரான புத்தாம்பூர் மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சொந்த செலவில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (ஆர்.ஓ.,சிஸ்டம்) வழங்கும் இயந்திரத்தை நிறுவி பாதுகாப்பான குடிநீரை வழங்கி வருகிறார். 

ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் தண்ணீரை தொட்டியில் ஏற்றப்பட்டு அங்கிருந்து, ஆர்.ஓ., பிளான்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.5க்கு (20 லிட்டர்) குடிநீர் தானியங்கி இயந்திரம் மூலம் வழங்கப்படுகிறது. 5 ரூபாய் நாணயத்தை இயந்திரத்தில் சொருகினால் (20 லிட்டர்) தண்ணீர் கேனில் நிரம்பிவிடுகிறது. இது இப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.





No comments:

Post a Comment