Monday 4 September 2017

திருமணத்திற்கு 200-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை அழைத்து அசத்திய தம்பதி



நேற்று(02.09.17) சோமனூர் கொங்கு கலையரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த் சாதனா திருமண நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை அழைத்து,அவர் வாழ்த்துக்களைப் பெற்று,அறுசுவை உணவளித்து,தங்கள் சொந்தமாகக் கருதி அவர்களை பத்திரமாக அவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்த திருமண வீட்டார் பாராட்டுக்குரியவர்கள்.

குழந்தைகள் அனைவரும் மணமேடையில் மணமக்களை ஒருமித்த குரலில் வாழ்த்தியது தங்கள் இல்லத்திருமணம் போல துள்ளிக்குதித்து ஓடியது கண்கொள்ளாக் காட்சி.இருபதுக்கும் மேற்பட்ட கல்யாண அழைப்புகளை கையில் வைத்துக்கொண்டு,அவசரம் அவசரமாக மணமக்களை வாழ்த்தக்கூட நேரமில்லாமல்,பந்தியில் பெயர்க்கு அமர்ந்துவிட்டு,உணவை வீணடிப்போருக்கு மத்தியில் இக்குழந்தைகள் மனமார மணமக்களை வாழ்த்தியது அனைவராலும் பாராட்டுக்குரியது.

நாங்களும் எங்களுடைய பங்களிப்பாக மணமக்களை” “ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி 16 செல்வங்கள்(கல்வி,அறிவு, ஆயுள், ஆற்றல்,இளமை,துணிவு,பெருமை,பொன்,பொருள், புகழ்,நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை,முயற்சி,வெற்றி) பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்தினோம்.

10 comments:

  1. I am very proud of you and I hope you are role models for future generations...

    ReplyDelete
  2. May u ppl blessed with all Goodness and Riches and Love.

    ReplyDelete
  3. May u ppl blessed with all Goodness and Riches and Love.

    ReplyDelete
  4. God bless you guys.. happy married life.

    ReplyDelete
  5. Super wish u happy married life

    ReplyDelete
  6. Yes really you are role model for us.. God bless you brother and sister...😍😘

    ReplyDelete
  7. Yes really you are role model for us.. God bless you brother and sister...😍😘

    ReplyDelete
  8. Different thing and roll model others

    ReplyDelete
  9. Awsome couple keep it help others

    ReplyDelete